தமிழகத்தில் ராகுல் காந்தி வருகை
"ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு"
இந்த சொல்லுக்கு மிக கச்சிதமாக பொருந்த கூடிய நிகழ்வு ராகுல் காந்தியின் தமிழக வருகை
தனது 3 நாள் பயணத்தில் தமிழக எதிர்கட்சிகள் பல வருடமாக கட்டிகாத்த கோட்டைகளை சுக்குநூறாய் உடைத்தெறிந்திருக்கிறார் ராகுல் காந்தி என்பதே உண்மை..
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டை காண தமிழகம் வந்த ராகுல்காந்தி எந்த ஆடம்பரமோ தலைவன் என்ற ஆணவமோ இல்லாமல் கிராமத்தில் மக்களோடு மக்களாக உணவருந்தி
எளிமையாக நடந்து கொண்டது அன்று மக்களிடம் பேசு பொருளானது..
மீண்டும் கொங்கு மண்டலத்தில் 3நாள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி முதல் நாள் கோவையில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி,
தொழில்முனைவோர், தொழிலாளர்கள் , சாலைபேரணி, மாவட்டதலைவரை வாகனத்தில் தன்அருகே அமரவைத்தது என மாஸ் காட்டிய ராகுல் காந்தி
பின்னர் திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் செல்லும் சாலை நெடுகிலும் மக்களும் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூரில் திருப்பூர்குமரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி பின்னர் மாநாடு பேரணிகளை முடித்து
ஈரோடு புறபட்டார்
ஈரோட்டில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் துவங்கிய ராகுல் நெசவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திவிட்டு
பெரியார் சிலைக்கும் பெரியார் சிலை அருகில் இருந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா ,MGR ,கருணா நிதி, ஜெயலலிதா போன்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் நாகரீகம் போற்றும் வகையில் நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பின்னர் கரூரில் விவசாயிகள் மத்தியில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி மாட்டுவண்டி பிரச்சாரம் காமராஜர் சிலைக்கு மாலை சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி என மக்களையும் இளைஞர்களையும் தன்னுடைய எளிமையால் மிரள வைத்தார்.
YOUTUBE ல் பிரபலமான சமையல் குழுவுடன் இணைந்து ராகுல் காந்தி சமைத்து பேசிய video தற்போது வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் ஒரு புரட்சியை வெறும் 3 நாட்களில் நடத்திகாட்டியுள்ளது என்பதே உண்மை. அதன் முழு வடிவமும் ராகுல் காந்தி என்ற ஒரு தனி மனிதரையே சாரும்...
தற்போது பல இளைஞர்கள் காங்கிரஸில் இணைய ஆர்வமாக உள்ளனர்.
திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத மாற்று அரசியல் கட்சியாக காங்கிரஸ் மாறும் என்பதில் மாற்றில்லை .
0 Comments