HATE ME

30/recent/ticker-posts

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி ? சாத்தியமா ? I👉 Translate your language option down

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி ? சாத்தியமா ?

ஒரு தலைவன் இறந்த உடன் பல கட்சிகளிலும் பதவிக்காகவும்
பணத்திற்காகவும் அலையும் கூட்டத்தின்  நடுவே தமிழகத்தில் 50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இன்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக பாடுபடும் தொண்டர்கள் உள்ள கட்சி காங்கிரஸ் என்பதை யாரும் மறுக்க முடிவதில்லை.



ஏன் காங்கிரஸால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை  என்பது வேறு கதை.
ஆனால் காங்கிரஸால் ஏன் காலூன்ற முடியாது என்பதே தற்போது கேள்வியாகிறது? மற்றும் இன்றைய தேவையும் கூட, 

தற்போது உள்ள இளைஞர்களும் தமிழக வாக்காளர் பெரும்பான்மை யானவர்களின் (சாதி,மத,இன வேறுபாடற்ற தேசியம்)  கொள்கைகளுடன் ஒருமித்த கருத்து உடைய கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே

இத்தனை ஆண்டுகாலம் தன்னுடன்  கூட்டணிவைத்த ADMK , DMK அல்ல எந்த கட்சிக்கும் துரோகம் இழைக்காத ஒரே கட்சி

இப்படி கூறிக்கொண்டே போகலாம் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க என்ன செய்யலாம் ??


1.உறுப்பினர் சேர்க்கை

நேரடியாக மாவட்டம் வட்டாரம் நகரம் அளவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்த வேண்டும் மற்றும் தமிழ்நாடுகாங்கிரஸில் இணையதளம் (onlinemembership) மூலமாக எளிதாக வீட்டிலிருந்தே உறுப்பினராக சேரும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் அதை சிறிது ஊடகத்தின்  (youtube facebook twitter whatsapp) மூலம் விளம்பர படுத்தி இளைஞர்கள் கட்சியில் இணைய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்  தமிழ்நாட்டில் இணையம் வழி ONLINE  MEMBERSHIP  உறுப்பினாகும் திட்டத்தை துவங்கி தீவிர படுத்த வேண்டும்


2.சோசியல் மீடியா

தற்போதைய சூழ்நிலையில் 25% அரசியல் ஊடகத்தில் மூலம் நடைபெறும் காரணத்தால் நகரம் வட்டாரம் என அனைத்து இடங்களிலும் தனி நபர்களை நியமித்து தனிகவனம் செலுத்த வேண்டும் இது அனைத்தும் ஒரு தலைமையின் கீழ் இயங்க வேண்டும் குறிப்பு :  ஊடகத்தில் ஒரு பதிவு தலைமை வெளியிட்டால் அந்த பதிவு அடிமட்ட தொண்டனை சென்றடையும் வரை கட்டமைக்க வேண்டும்


3.ஒரு பதவி

கட்சியில் ஒருவருக்கு  ஒருபதவி என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும் இரண்டு பொறுப்பு இருக்கும் பட்சத்தில் ஒன்றை ராஜினாமா செய்து  பொறுப்பை பெற்று கொள்ள வழிவகை செய்யவேண்டும்


4.உள்ளாட்சி தேர்தல்

கட்சியின் ஆணிவேர் தொண்டர்களே அவர்களை உறுதியோடு அரசியலில் வைத்திருக்கும் சக்தி உள்ளாட்சி தேர்தலுக்கு உண்டு கட்சி மக்களை சென்றடைய பெரிதும் உதவி செய்வது உள்ளாட்சி தேர்தல்கள் அதில் முடிந்த வரையில் தனித்து போட்டியிட வேண்டும் சிலருக்கு சந்தேகம் வரலாம் தனித்தா எப்படி வெற்றி பெறுவது என்று வெற்றி பெறுவது கட்சி நிறுத்தும் வேட்பாளர்களின் மக்களின் நம்பிக்கை பொறுத்தே அமையும் தலைவர்கள் சிபாரிசுகளால் சீட் பெற்றால் தோல்வியே. கட்சிபற்றுள்ள மக்கள்நம்பிக்கையுடைய வேட்பாளர்களை அனைத்து உள்ளாட்சி பேரூராட்சிகளில் நிறுத்தும் பட்சத்தில் வெற்றியே தோல்வி கிடைத்தாலும் கட்சி ஓட்டுவங்கி உயருமே தவிர கட்சி தேயாது


5.ஆட்சி அதிகாரம்

காங்கிரஸ்கட்சி செய்த தவறுகளில் மிகபெரியது மாநிலத்தில் கூட்டணிஆட்சி ,அதிகாரம் பலமுறை கூடிவந்தும் கூட்டணி கட்சியிடம் பேசி பதவிகளை பெற்று கொள்ளாதது மீண்டும் நடக்காமல் பார்த்துகொண்டால் நலம் குறிப்பு (இதை எதிர்ப்போருக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமைச்சர் பதவி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் கொடுக்கபட்டது)


6.கட்சி தேர்தல்

தமிழகத்தில் அனைத்து நகரம் வட்டாரம் முதல் மாவட்ட தலைவர் என அனைத்து பொறுப்புகளுக்கும்  தேர்தல் மூலம் தொண்டர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் முறை ஏற்படுத்த வேண்டும் இதை செய்யும் பட்சத்தில் அடிமட்ட தொண்டனும் பதவியில் அமரவாய்ப்பு ஏற்படும் கட்சிக்கும் புத்துணர்சி கிடைக்கும்
மற்றும் பதவிகாலம் 3 வருடம் கட்டாயமாக்க வேண்டும்
தற்போது தேர்தல் முறை இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸில் தற்போது செயல் படுகிறது இதை காங்கிரஸின் அனைத்து பொறுப்புக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் இதை நேர்மையாக செய்தால் கட்சிக்கு வளர்பிறையே


7.நாளிதழ்,தொலைகாட்சி

காங்கிரஸின் போராட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகம் நாழிதளுக்கும் பெரும் பங்கு உண்டு
ஆகையால் மற்ற ஊடகங்களை சாராமல் காங்கிரஸ் கட்சிக்கு தனியாக தொலைக்காட்சி சேனல் மற்றும் நாளிதழ் ஆரம்பித்து கட்சியின் பொது கூட்டம் தெருமுனை கூட்டம் நலதிட்டம் ஆர்பாட்டங்களை ஒளிபரப்பி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்


8.தலைவர்கள்தின விழா

பிற கட்சிகளை விடவும் நாட்டுக்காக உயிர் துறந்த எண்ணற்ற தியாக தலைவர்களை கொண்டுள்ள கட்சி காங்கிரஸ் ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மக்களால் நேசிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாள்களில் அந்தந்த  மாவட்டங்களில் பேரணி அல்லது மாநாடுகள் நடத்தி அவர்களின் புகழ்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்


9.பிற அமைப்புகளின் முக்கியதுவம்

காங்கிரஸில் உள்ள மகிளா,இளைஞர்,மாணவர் சிறுபான்மை ,சேவாதளம் தொழிலாழர்... etc போன்ற அனைத்து பிரிவுகளுக்கும் தகுந்த முக்கியதுவம் அளித்து அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை நியமித்து தேர்தலலிலும் முக்கியத்துவம் அளிக்கபட வேண்டும்


10.வருமானம் மற்றும் சொத்து மீட்பு

பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் ஆழிந்து போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை செய்ய வேண்டும் கட்சிக்கு வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முடிந்த வரையில் சொந்த கட்சி அலுவலகம் இல்லாத மாவட்டங்களில் கட்சி அலுவலகம் உருவாக வழிவகை செய்ய வேண்டும் கட்சிக்கு சிறு தொகையாயினும் நிதி அழிப்போர் எளிதாக அலைபேசி மூலமாக (googlepay) போன்ற செயலிகள் மூலம் செலுத்தும் படி ஏற்படுத்த வேண்டும்


11.பூத் கமிட்டி 

காங்கிரஸில் அனைத்து பூத்கமிட்டியிலும் 10 பேர் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்


12.சினிமா பிரபலங்கள்

காங்கிரஸ்கட்சி ஆதரவு உடைய சினிமா பிரபலங்களை கட்சியில் இணைக்கலாம்


13.தொண்டர்கள்

காங்கிரஸின் தொண்டர் ஒருவருக்கு பிரச்சனை எழும் பட்சத்தில் அவருக்கு கட்சி முழு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் 


14.தலைவர்கள் சமூக பதிவுகள்

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை சிறிது தொகை  செலுத்தி பொதுமக்களிடம் அனைவரிடமும் கொண்டு சேர்க்க ஊடக பிரிவு வழிவகை செய்ய வேண்டும்.



இவை அனைத்தும் செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி சாத்தியமே.

மற்ற கட்சிகளை போல்அல்லாமல் தலைவன் மேல் குறை இருப்பினும் சுட்டிகாட்டும் ஜனநாயக கட்சியே காங்கிரஸ்  என்ற முறையில் கருத்து கூறி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காண காத்திருக்கும் - தொண்டன் JAI HIND

உங்கள் கட்சி மற்றும் கருத்துக்களை COMMENT ல் தெரிவியுங்கள்

இந்த பதிவை பகிர கீழே SHARE


Post a Comment

0 Comments