HATE ME

30/recent/ticker-posts

மலையளவு துக்கம் இருந்தாலும் - நேருவின் குடும்பத்தினர் ஒரு போதும் அழ மாட்டார்கள்

மலையளவு துக்கம் இருந்தாலும் - நேருவின் குடும்பத்தினர் ஒரு போதும் அழ மாட்டார்கள் ..!

நேருவின் ஒன்றுவிட்ட சகோதரர்

 P.K நேரு ஒரு ஹங்கேரி பெண்ணான போரியை .காதலித்தார். தனது குடும்பத்தினரிடம் அவரை அறிமுகப்படுத்த,ஆனந்த பவனுக்கு  1935 ஆம் ஆண்டு அழைத்துச் சென்றார்.
அப்போது நேரு அலிப்பூர் சிறையில் இருந்தார்.
ஆகவே, நேருவை சந்திக்க அலிப்பூர் சென்றார்கள் - நேருவிடம் ஆசி பெற்றார்கள்.

திருமணமும் நடந்து முடிந்த நிலையில், அந்த மணப் பெண்ணுக்கு  நேருவிடம் இருந்து கடிதம் வந்தது.

 வழக்கமான வாழ்த்துளோடு அதில்,
 " நீ எங்கள் குடும்ப மருமகளாகி விட்டாய். ஆகவே,  எங்கள் வழக்கப்படி நீயும் உன்னை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். சிறையில் என்னை சந்தித்து விட்டு செல்லும் போது, உனது கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. அந்த பழக்கத்தை மாற்றிக் கொள். ஏனென்றால், மலையளவு துக்கம் இருந்தாலும் நேரு குடும்பத்தினர் அழுவதில்லை.." என்று எழுதியிருந்தார்.

Post a Comment

0 Comments