HATE ME

30/recent/ticker-posts

தா.பாண்டியன்

தா.பாண்டியன்

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , சட்ட மன்றத்துக்கு 6 முறையும், நாடாளுமன்றத்துக்கு 3 முறையும் போட்டியிட்ட இவர் - ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை ..! 

ஆனால் , ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்று தனிக்கட்சி நடத்தி வந்த காலத்தில், வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்று , MP யாகியுள்ளார். 

சிறந்த மொழி பெயர்பாளர் ராஜீவ்காந்தியின் நண்பர். தமிழகத்துக்கு ராஜீவ் காந்தி வரும் போது, அவரது மேடை பேச்சுகளை மொழி பெயர்த்திருக்கிறார். 

1991 மே -21 அன்று, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது - ராஜீவ் காந்திக்கு பின்னால் இருந்த தோழர் தா.பா அவர்கள் தூக்கி வீசப்பட்டார். 

அந்த கொடூர சம்பவத்தில் இறந்த 19 பேர் லிஸ்ட் முதலில் வெளிவந்த போது , இவரது பெயரும் அதில் இருந்தது. இவரது வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் தகவலும் சொல்லி விட்டனர் . பின்னர் தெரிய வந்தது - அரசு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டது பற்றி. அதிசயமாக உயிர் பிழைத்த தா.பா அவர்கள், தான் இருந்த மருத்துவமனையில் தான் ராஜீவ் காந்தி உடலும் வைக்கப்பட்டிருந்தது என்பதால் - அரசு மருத்துவமனை பெயரை ராஜீவ் காந்தி மருத்துவமனை என்று மாற்றக் கோரி , தனது விடா முயற்சியால் - ராஜீவ் காந்தி பெயரை சூட்ட முக்கிய காரணமாக இருந்தவர். 

ராஜீவ் மரணத்திற்கு பிறகு, விடுதலை புலிகளை தீவிரமாக எதிர்த்தவர். 

மதுரை மாவட்டம், உசிலம் பட்டி தொகுதி வெள்ளமலைப் பட்டி இவர் பிறந்த ஊர். உசிலம்பட்டியில் பிறந்து, காரைக்குடி அழகப்பா பல்கலைகழத்தில் கல்வி கற்று, ஆசிரியையை மணம் முடித்து , தான் மட்டும் சென்னைக்கு இடம் பெயர்ந்து - மனைவியின் சம்பளத்திலேயே தனது வாழ்நாளை ஓட்டியதாகவும் , தனது மனைவிக்கு ஆசையாக பூ வாங்கிக் கொடுக்கக் கூட வசதியற்று இருந்த நான், 2012 ல் அவரது மறைவிற்கு பிறகு அவரது படத்துக்கு பூச்சூடி, நான் பட்ட கடனை கழிக்கிறேன் என்று வருத்தபட்டவர் தோழர் தா.பா

Post a Comment

0 Comments