நாம் அனைவரும் நினைப்பது போல் ஆந்தைகளால் அதன் தலையை 360 டிகிரிக்கு திருப்ப முடியாது உண்மையிலேயே அது தனது தலையை இரண்டு பக்கமும் 135 டிகிரிக்கு திருப்ப தான் முடியும் அதாவது ஆந்தைகளைப் பொறுத்தவரை தமது தலையை 270 டிகிரியில் இடம் வலமாக திருப்ப கூடியவை இதனால் ஒரே இடத்தில் இருந்துகொண்டே தம்மைச் சுற்றியுள்ளவற்றை கவனிக்கக்கூடியவை ஆந்தைகளால் தனது தலையை 360 டிகிரி திருப்ப முடியும் என்பது ஒரு கட்டுக்கதை தான் ஆந்தைகளில் சில ஆந்தைகள் நாம் எல்லாரும் வியக்கத்தக்க வகையில் மற்ற ஆந்தைகளைகளை வேட்டையாடுகிறது பண்டைய கால கிரேக்க போரின்போது ஆந்தைகள் பறப்பதைக் கண்டால் அது அவர்களின் போரின் வெற்றியின் அடையாளமாக கருதினார்கள் ஒரு காலகட்டத்தில் போரின் வெற்றியின் அடையாளமாக ஆந்தைகள் கருதப்பட்டன அமெரிக்காவில் ஆந்தைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது சட்டவிரோதமானது
ஆந்தைகளுக்கு மூன்று கண் இமைகள் இருக்கும்
1)கண்களை சிமிட்டுவதற்கும்
2) தூங்குவதற்கும்
3) கண்களை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுத்தும்
2) தூங்குவதற்கும்
3) கண்களை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுத்தும்
பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளை விட அளவில் பெரியவை அது மட்டுமல்ல பெண் ஆந்தைகள் ஆண் ஆந்தைகளை விட மிகவும் ஆக்ரோசமாக இருக்கும்5லிருந்து 6 அங்குல உயரம் கொண்ட ஆந்தை தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறிய ஆந்தை 32 அங்குல உயரம் கொண்ட ஆந்தை உலகத்திலேயே பெரிய ஆந்தை ஆந்தை இனங்களில் மிகப்பெரியவை ஆசியாவின் வட பகுதி மற்றும் ஐரோப்பாவின் வாழ்கின்றன களஞ்சிய ஆந்தைகள் (barn -owl) தங்களுடைய இரையை முழுசா விழுங்கிவிடுகின்றன இவ்வகை ஆந்தைகள் ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 எலிகளை சாப்பிடும்
ஆந்தைகளில் சுமார் 200 இனங்கள் உள்ளன
இவை மற்ற பறவைகளை விட வித்தியாசமான பல வினோத அம்சங்களைக் கொண்டவை இவற்றின் முகத்தின் அமைப்பு தட்டையாகவும் கண்கள் முன் நோக்கியதாகவும் காணப்படுகின்றன இவற்றின் உடல் எடை அதிகபட்சம் மூன்று கிலோ வரை காணப்படலாம் உடல் அன்னளவாக 60 லிருந்து 70 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை இவை மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை ஆந்தைகள் உலகின் தென் துருவம் தவிர்ந்த எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது வாழ்விடத்திற்கு ஏற்ப சில இயல்புகள் மாறுபட்டாலும் அனேக இயல்புகளில் அனைத்தும் ஒத்துக் காணப்படுகின்றன
இவை பொதுவாக மரப் பொந்துகள் உயரமான மரங்கள் குகைகள் போன்ற இடங்களில் வாழக்கூடியவை இரவு நேரங்களிலேயே உணவு தேடும் பழக்கம் கொண்டவை பகலில் இவற்றில் பார்வைத்திறன் குறைவாகும் ஆனால் இரவில் இவை துல்லியமான பார்வை திறனை கொண்டவை
எலிகள் சிறிய நகருயிர்கள் சிறிய பறவைகள் அரிதாக மீன் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இவற்றின் கேட்கும் திறன் அதிகமாகும் இதனால் சிறிய அசைவைக் கூட இவை உணரக் கூடியவை இவை பறக்கும்போது சத்தம் கேட்காத வண்ணம் பறக்கக் கூடியவை அதற்கு அவைகளின் இறக்கைகளில் மிருதுவான தன்மையை காரணமாகும் அத்தோடு வேறு எந்த பறவைக்கும் இல்லாத படி இவற்றின் கால்கள் வலிமையானவை இதனால் தமது உடல் நிறையை விட இரண்டு மூன்று மடங்கு பெரிய இரைகளை தூக்கிச் செல்லக் கூடியவை இவை அமைதியான பறவைகளாக காணப்பட்டாலும் சில நேரங்களில் அபாயகரமாக செயற்படும் தன்மை கொண்டவை மனிதர்களுடன் இயல்பாகப் பழகக் கூடிய இயல்பைக் ஆந்தைகள் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சந்தர்ப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றன ஆந்தையை கிரீஸ் நாடு தனது தேசியப் பறவையாக கொண்டுள்ளது
0 Comments