HATE ME

30/recent/ticker-posts

காட்டு பன்றிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

காட்டுப்பன்றிகள் பெரிய தலை நீண்ட மூக்கு சிறிய வாய் மற்றும் 2 பின்னோக்கி வளைந்த தந்தங்கள் குட்டையான உடலமைப்பு என்பனவற்றை கொண்ட விலங்குகள் இவைகள் கூட்டமாக வாழக்கூடியவை கூட்டத்தை ஆண் காட்டு பன்றிகள் பாதுகாக்கும் காட்டுப் பன்றிகளின் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்தது இவைகள் காட்டில் உள்ள எல்லா மாமிச உண்ணி விலங்குகளுக்கும் இரையாக கூடியவை இதனால் பிறந்ததில் இருந்தே இறுதிவரை ஓடித் தப்ப வேண்டிய வாழ்க்கை வாழ்கின்றன காட்டு பன்றிகளின் தன் பாதுகாப்பிற்காக இரண்டு தந்தங்கள் உண்டு இதை கொண்டு நரி போன்ற சிறிய விலங்குகளிடம் இருந்து தப்ப முடியுமே தவிர சிங்கங்கள் போன்ற பெரிய விலங்குகளிடம் இருந்து தப்பி கொள்ள முடியாது 

ஆனால் இத்தந்தங்களையும் தம்கால்களையும் கொண்டு மண்ணில் வளை அமைத்து அதில் வாழ்கின்றன பகல் நேரத்தில் பல வழிகளை கொண்ட வளைகளிலும் இரவு நேரங்களில் ஒரு வழி கொண்ட வளைகளினுள்ளும் வாழ்கின்றன இவற்றுக்கு பார்வைத் திறனும் கேட்கும் திறனும் குறைவாக இருந்தாலும் அதை ஈடு செய்யும் அளவிற்கு காட்டு பன்றிகளுக்கு மோப்ப திறன் அதிகமாகும் மோப்ப திறனை கொண்டு உணவு தேடுதல் மற்றும் எதிரி விலங்குகள் நிலையை அறிந்து கொள்கின்றன இவற்றின் தோல் கடினமானது பெரிதாக வியர்வை சுரப்பிகள் இல்லை இதனால் உடல் வெப்பநிலையை குறைக்க சேற்றில் உருள்கின்றன இவற்றுக்கு உடல் முழுவதும் கடினமான முடிகள் காணப்படும் முதுக்குப்புறமாக முடிகளின் அடர்த்தி அதிகமாகும் காட்டு பன்றிகள் சேற்று பகுதிகளிலும் சமவெளிபகுதிகளிலும் பகல் நேரங்களில் உணவு தேடுகின்றன இரவு நேரங்களில் உணவு தேடுவதைத் தவிர்த்துக் கொள்கின்றன 

இரவில் உணவு தேடும் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு பெற ஆழமான வளைகளில் எச்சரிக்கையுடன் காணப்படும் காட்டு பன்றிகள் ஒரு தடவையில் நான்கு முதல் 8 குட்டிகள் வரை ஈனுகின்றன இவற்றில் பாதி குட்டிகள் எதிரி விலங்குகளால் கொல்லப்படுகின்றன எஞ்சிய குட்டிகளே தப்பி வாழ்கின்றன பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் காட்டுப் பன்றிகளிடமிருந்து பரினாமமடைந்த இனங்களாகும் காடுகளில் இவற்றில் குடித்தொகை அதிகமாகக் காணப்பட்டாலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளுக்கு வருவதால் பெருமளவு விவசாய சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை இதனால் மனிதர்களால் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன காட்டுப்பன்றிகள் பொதுவாக 7 முதல் 11 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தற்போது தென் ஆபிரிக்காவின் மட்டும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட காட்டுப்பன்றிகள் காணப்படுகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments