HATE ME

30/recent/ticker-posts

கொரில்லாக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

கொரில்லாக்கள் ஆப்பிரிக்க காடுகளில் வாழும் பெரிய விலங்கு ஆகும் இவற்றின் டிஎன்ஏ 95 சதவீதத்திற்கு மேல் மனிதனின் டி என்ஏயுடன் ஒத்து காணப்படும்  இவைகளில் பிரதானமாக இரண்டு வகைகள் காணப்படும்

ஈஸ்ட் கொரில்லா மற்றும் வெஸ்ட் கொரில்லா

 இதில் வெஸ்ட் கொரில்லாக்கள் அளவில் சற்றுப் பெரியவை

கொரில்லாக்கள் கூட்டமாக வாழும் விலங்குகள் ஒரு கூட்டத்தில் 50 கொரில்லாக்கள் வரை இருக்கலாம்

இவைகளின் சராசரி உடல் நிறை 150 முதல் 200 கிலோ வரை காணப்படும்

இது நன்கு வளர்ந்த ஒரு சிங்கத்தின் உடல் எடைக்கு சமமானது

இவை ஐந்து அடி வரை நீளமாக வளரும்
இவற்றின் சராசரி ஆயுட்காலம் 30 முதல் 40 ஆண்டுகள் ஆகும்

ஆனால் கொலம்பஸ் மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்த பெண் கொரில்லா ஒன்று 60 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தது

கொரில்லாக்களின் சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் ஆகும்

இவைகள் சுமார் 1300 பிஎஸ்ஐ அழுத்தத்துடன் கடிக்கக்கூடியவை இது சிங்கங்கள் கடிக்கும்போது கொடுக்கும் அழுத்தத்தை விட இருமடங்கு அதிகமாகும்

கொரில்லாக்கள் மற்ற  குரங்கினங்களை போல் இல்லாது இயல்பிலேயே மூர்க்கத்தனமானவை

  தமது எல்லைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதுடன் ஏனைய விலங்குகள் தான் வாழும் பகுதிக்கு  வருவதை அனுமதிக்காது

கொரில்லாக்கள் தங்கள் உடல் எடையை விட 10 மடங்கு பெரிய பொருளையும் தூக்க கூடியவை

இவற்றின் கைகளின் அமைப்பு மனிதர்களை போலவே கருவிகளைக் கையாளும் விதத்தில் காணப்படுகின்றது

அதேபோல் மனித கைரேகைகளை போலவே இவற்றின் கைரேகைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை  இவற்றின் பார்வைத் திறனும் அதிகமாகும்

கொரில்லாக்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டாலும் சிங்கங்களை போன்ற பெரிய பூனை இன விலங்குகளுடன் கூட சரிக்குச் சமமாக நின்று சண்டைபோடும் அளவுக்கு வல்லமை கொண்டவை

மனிதர்களைப் போலவே யோசிக்கும் திறன் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கருவிகளைக் கையாளும் திறன் என்பன கொரில்லாக்களுக்கு உண்டு

கொரில்லாக்கள் மரங்களை விட தரையில் இருப்பதையே அதிகம் விரும்பும்

ஆனால் அதி வேகமாக மரம் ஏறும் திறன் கொண்டவை சிலவேளைகளில் கூடு கட்டி அதில் வாழ்வதையும் விரும்பும் பழக்கத்தைக் கொண்டவை

Post a Comment

0 Comments