HATE ME

30/recent/ticker-posts

சீட்டாக்களை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

பூனை குடும்பத்தில் அடங்கும் சீட்டாக்கள் அக்குடும்பத்தில் ஆறாவது பலமிக்க விலங்குகள் ஆகும் இவை ஏனைய பெரும் பூனைகளைப் போலவே மாமிச உண்ணிகள் ஆகும்  ஒட்டுமொத்த பூனை குடும்பத்தில் பலத்தில் ஆறாத நிலையில் காணப்பட்டாலும் இவற்றின் கடிக்கும் அழுத்தம் 1050 பிஎஸ்ஐ யாக காணப்படுகிறது  இது இக்குடும்பத்தில் மூன்றாவது பலமாக கடிக்கக்கூடியதாக உள்ளது  சீட்டாக்கள் 50 முதல் எழுபத்தி இரண்டு கிலோ வரை உடல் பருமனையும் 1.5 மீட்டர் நீளத்தையும் கொண்டவை  

இவைகள் வேகத்துக்கு பெயர்போன விலங்குகளாகும் தரையில் உள்ள விலங்குகளில் அதி வேகமாக ஓடக் கூடியவை சீட்டாக்கள்  இவை மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது  ஆனால் அதே வேகத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே இவற்றால் ஓட முடியும்  வேகமாக ஓடக்கூடிய திறனை சீட்டாக்கள் இரையை பெற பெருமளவில் உதவி புரிகிறது காரணம் இவை சிறுத்தை மற்றும் புலிகளை போல் பதுங்கிப் பாயும் உத்தியை கையாள விரும்புவதில்லை சீற்றாக்கள் அதிகம் ஆப்பிரிக்க பாலைவன பகுதிகளிலும் வறண்ட புல்வெளி பகுதிகளிலும் வாழ்வபை  

ஆப்பிரிக்காவுக்கு வெளியே அரிதாகவே சீட்டாக்கள் வாழ்கின்றன  இவைகளின் இரையை கொல்லும் உக்தி சிங்கம் புலிகளை போன்ற பெரிய விலங்குகளை போலவே கழுத்து பகுதியை கடிப்பதன் மூலம் கொல்லக்கூடியவை இயல்பில் ஜாக்குவார் களிலிருந்து இவை வேறுபடுகின்றன  இவற்றின் பார்வைத்திறனானது இயல்பாக பூனைக் குடும்ப விலங்குகளுக்கு இருப்பதைப் போல் ஆதி கூர்மையானது  

இவை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரைகளை கூட தெளிவாகப் பார்க்கக் கூடியவை  இவை அதிகமாக தன்னைவிட வலிமை கூடிய விலங்குகளை வேட்டையாடுவது இல்லை  முயல் மான் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடக் கூடியவை இவற்றில் உருவம் சிறுத்தை மற்றும் ஜாக்குவாரை ஒத்திருந்தாலும் உருவ அமைப்பிலும் நடத்தையிலும் பல வேறுபாடுகளை கொண்டுள்ளன  இவற்றின்  உடலமைப்பை பொருத்தவரை சிறிய தலையுடன் கூடிய மெலிந்த தேகத்தை கொண்டிருப்பதுடன் முகத்தில் குறைவாகவும் அடிவயிற்றில் புள்ளிகளைக் கொண்டு இருப்பதில்லை மாறாக உடல் எங்கும் புள்ளிகளை கொண்டவை 

இவற்றின் முகத்தில் உள்ள கண்களிலிருந்து வாய்ப்பகுதி வரை காணப்படும் தடித்து நீண்ட கருமை நிறக் கோடு சிறுத்தைகளிலிருந்து இவற்றை எழுதில் வேறுபடுத்த உதவும்இவற்றுக்கு சிறுத்தைகள் அளவுக்கு மரம் ஏறும் திறன் இல்லை என்றாலும் ஆபத்து வரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மரம் ஏற கூடியனஇவை  காட்டில் வாழும் பூனை குடும்ப விலங்குகளாக காணப்பட்டாலும் ஏனைய விலங்குகளுடன் சண்டையிடுவதை விரும்பாது பொதுவாக இவற்றை விட பெரிய விலங்குகள் சண்டை வரும்போது அதை எதிர்கொள்ளாமல் தப்பியோடும் இயல்பைக் கொண்டவை

ஒட்டுமொத்தத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளின் இயல்பை பெருமளவில் ஒத்ததை இவை குட்டி ஈனும் காலம் 90 நாட்களாக காணப்படுவதுடன் ஒரே தடவையில் 6 குட்டிகள் வரை ஈனும் இவற்றின் ஆயுட்காலம் 12 முதல் 14 வருடங்கள் ஆகும் இவை  மாமிச உண்ணியாக இருந்தாலும்  சிங்கம் கழுதைப்புலி போன்றவை இவற்றை உணவாக்குகின்றன

Post a Comment

0 Comments