மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் பொருட்டு மாவட்ட அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 26.03.2022 அன்று ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவிலில் வைத்து காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்து பன்னாட்டு
நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளனர்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 10-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி (ITI), பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, நர்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தங்களது கல்விசான்றிதழ், சாதிசான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிசான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அலுவலக முகவரி:
திட்ட இயக்குநர்,
மாவட்டஆட்சியர்அலுவலகம்,
இணைப்பு கட்டிடம்,இரண்டாம் தளம், நாகர்கோவில் - 1.
தொடர்புக்கு: 04652 - 279275 / 278449.
மின்னஞ்சல்: dpiu_kki@yahoo.com.
1 Comments
TRY THIS https://luxskinscrub.com/
ReplyDelete