HATE ME

30/recent/ticker-posts

ஆப்பிரிக்க காட்டு நாய்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஆப்பிரிக்க காட்டு நாய்கள் நாய் குடும்பத்தில் உள்ள விலங்குகள் ஆகும் இவைகள் காட்டுநாய்கள் வேட்டை நாய்கள் என பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன

காட்டு நாய்களின் ஆசிய காட்டு நாய்கள் எனப்படும் செந்நாய்கள் மற்றும் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் என இரண்டு வகைகள் காணப்படுகின்றன

இதில் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் பல செயல்களில் தனித்துவமானவை

இவைகள் ஆப்பிரிக்கச் சமவெளிகளை வாழிடமாக கொண்டவை காட்டு நாய்கள் பெரும்பாலும் நிரந்தர வாழ்விடத்தை கொண்டிருப்பதில்லை

உணவு மற்றும் எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக இடம்பெயரும் தன்மை கொண்டவை

நன்கு வளர்ந்த ஒரு காட்டு நாய் இருபத்தி இரண்டு கிலோ உடல் எடையைக் கொண்டது இது 90 சென்றி மீட்டர் நீளமாக வளரக்கூடியது

ஆப்பிரிக்க காட்டு நாய்கள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது

இவைகள் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரும் கூட்டமாக சமவெளிகளில் வலம் வருவதுடன் இரைகளை வேட்டையாடுவதிலும் கூட்டமாக செய்யப்படும்

கூட்டமாக செயல்படுவதில் ஹைனாக்களை மிஞ்சக்கூடிய காட்டு நாய்கள் இரையை வேட்டையாடுவதில் அதி திறமைசாலிகள்

இவைகளின் ஒற்றுமையால் காட்டெருமை மான் காட்டுப்பன்றி போன்ற இவைகளை விட அளவில் பெரிய விலங்குகளை வேட்டையாடக் கூடியவை

இவை அரிதாக தனித்து வேட்டையாடும் ஹைனாக்களை போலவே இறந்த உணவை உட் கொள்ளாது  வேட்டையாடி உண்ணும் பழக்கம் இவற்றுக்கு உண்டு

இது சுமார் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் இரையை இரண்டு கிலோமீட்டர் வரை தொடர்ந்து துரத்தக்கூடியவை

இவைகளின் பிரதான எதிரிகள் ஹைனாக்கள் காட்டு நாய்கள் பிடிக்கும் இரையை பெரும்பாலும்  கைப்பற்றுபவை ஹைனாக்கள் இதனால் உணவுக்கான சண்டை ஹைனா  கூட்டத்திற்கும் காட்டு நாய் கூட்டத்துக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது

இவை குட்டி ஈனும் காலம் 70 நாட்கள் ஆகும் இவை ஒரே தடவையில் 10 குட்டிகள் வரை ஈனும்

கூட்டத்தில் உள்ள பெரிய விலங்குகள் இரையை உண்பதற்கு குட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கும்

எதிரிகளின் தாக்குதலாலும் உணவுக்கான போட்டியாலும்  இவை பெருமளவில் அழிந்து வருகின்றன

இதனால் 1990 செந்தரவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

மத்திய ஆப்பிரிக்காவில் சிங்கோ பகுதியில் 2012 ன்இவைகளின் குடித் தொகை 160 ஆக காணப்பட்டதுடன் 2017ல் இக்குடித்தொகை 26 ஆக குறைவடைந்தது

Post a Comment

0 Comments