HATE ME

30/recent/ticker-posts

பென்குயின்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

பென்குயின்கள் அனைவராலும் விரும்பப்படும் பறவைகள் ஆகும் இவை அதிகமாக வடதுருவம் மற்றும் ஆஸ்திரேலியா அர்ஜெண்டினா நியூசிலாந்து போன்ற நாடுகளில் காணப்படுகின்றன

பென்குயின்கள் பறக்க முடியாத பறவைகள் மற்ற பறவைகளை விட பென்குயின்கள் நடை அழகும் தனித்துவமும் கொண்டது

பென்குயின்கள் பேரரசர் பென்குயின்கள் அரசர் பென்குயின்கள் தாடி உள்ள பென்குயின்கள் மற்றும் லிட்டில்புளூ பென்குயின்கள் என 17 வகைகளைக் கொண்டு உள்ளன

அதில் பேரரசர் பென்குயின்கள் அளவில் மற்ற பென்குயின்களை  விட பெரியவை

இவை 20 முதல் 45 கிலோ வரை உடல் எடையையும் 100 சென்டி மீட்டர் உயரத்தையும் கொண்டவை

இவற்றின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும் பேரரசர் பென்குயின்களுக்கு அடுத்ததாக அரசர் பென்குயின்கள் பெரியவை

பென்குயின்களில் லிட்டில் புளூ பென்குயின்கள் சிறியவை இவை ஆறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழக் கூடியவை பென்குயின்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்புப் பெறவும் குளிரின் தாக்கத்தை குறைக்கவும் கூட்டமாக ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றன

பென்குயின்கள் பறக்க முடியாதவை என்பதால் அவற்றின் இறக்கைகள் நீரில் நீந்த கூடிய விதத்தில் துடுப்புகள் போல் மாற்றம் பெற்றுள்ளன

பென்குயின்களின் பிரதான எதிரிகள் சீல்ஸ் மற்றும் கடற்சிங்கம் சுறா போன்றவையாகும்

பென்குயின்கள் பெரும்பாலும் மீன்களை உட்கொள்கின்றனர் இவற்றால் கடலின் ஆழம் வரை சென்று மீன்களை பிடிக்க முடியும்

பென்குயின்களால் 20 நிமிடம் வரை நீருக்குள்  இருக்க முடியும் பென்குயின்கள் ஒரு தடவையில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றன

ஆனால் பேரரசர் மற்றும் அரச இனப் பென்குயின்கள் ஒருமுட்டையை மட்டுமே இடுகின்றன

பென்குயின்கள் முட்டை ஏனைய பறவை  முட்டையுடன் ஒப்பிடும்போது சிறியவை 52 கிராம் அளவில் காணப்படும்

பென்குயின்கள்   நீரில் இவற்றின் வேகம் மணிக்கு 36 கிலோ மீட்டர் வரை காணப்படும் பென்குயின்கள் தங்கள் வால் மற்றும் இறக்கைகளில் துணைகொண்டு சமநிலையை பேணுகின்றன

 பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாறைகளில் பயணிக்கும் போது வயிற்றுப் பகுதியை பயன்படுத்துவதன் மூலம் இவை இடம்பெயர்வை மேற்கொள்கின்றன

Post a Comment

0 Comments