செந்தமிழ்நாட்டு நிலங்கள்
இன்றைய தமிழ்நாடும் ஆந்திராவும், தெலுங்குதேசமும்,கன்னடமும்,கேரளமும் இணைந்த 12 நாடே செந்தமிழ் நாடு
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன் வடக்கு - நன்றாய சீத மலாடு புன்னாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட் டெண்”-என்று நன்னூல் கூறுகிறது
"செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலம்" என்று தொல்காப்பியம் கூறுகிறது
1.தென்பாண்டி நாடு
திருநெல்வேலி பகுதி
2.குட்டம் நாடு
கேரளத்தின் கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் உள்அடங்கிய பகுதி
3.குடநாடு
மலபார் மற்றும் குடகு இணைந்த பகுதி
4.கற்காநாடு
கொங்கு என்று சமணர்கள் அழைக்கும் முன்பு இருந்த பெயர் கற்காநாடு. மலைகள் கோவை சூழ்ந்த பகுதி
5.வேணாடு
திருவனந்தபுரம்,கன்னியாகுமரி மாவட்டம் முழுமையும் உள்ளடக்கிய பகுதி
6.பூழிநாடு
கேரளத்தின் கோழிக்கோடு தொடங்கி தமிழ்நாட்டின் வாசுதேவநல்லூர், புளியங்குடி வரை. பூழியன்குடி தற்போது புளியங்குடி என்று அழைக்கப்படுகிறது
7.பன்றி நாடு
பொதினி என்று இலக்கியம் கூறும் இன்றைய பழனி மலைப்பகுதி
8.அருவாநாடு
வேம்பு மரங்கள் சூழ்ந்த வேலூர் வட ஆற்காடு மாவட்டமும்,தென் ஆற்காடு மாவட்டமும், செங்கழுநீர்பட்டு என்ற செங்கல்பட்டு மாவட்டமும் உள்ளடக்கிய பகுதி
9.அருவா வடதலைநாடு
சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள் அடங்கிய பகுதி
10.சீதம் நாடு
நீலமலை எனும் தமிழ்ப்பெயர் சமஸ்கிருதத்தில் திரிந்து நீலகிரி எனும் மலைப்பகுதி
11.மலையமான் நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதி
12.புனல் நாடு
பண்டைய சோழநாடு
இதுவே சங்ககாலத்தில் செந்தமிழ் பேசிய செந்தமிழ் நாடு
0 Comments