HATE ME

30/recent/ticker-posts

திருப்பூரின் ஜான்ஸிராணி - சுந்தராம்பாள்

திருப்பூரின் ஜான்ஸிராணி - சுந்தராம்பாள்

வட நாட்டில் வெள்ளையனை எதிர்த்து கைக்குழந்தையுடன் போரிட்ட மீரட்டின் ஜான்ஸிராணி போல திருப்பூரில் ஆங்கிலேயனை எதிர்த்து தன் கைக்குழந்தையுடன் சிறை சென்றவர் வீரபாண்டி ஆத்தா என எல்லோராலும்   அன்புடன் அழைக்கப்பட்ட திருமதி N.சுந்தராம்பாள் 
1928 ல் நொய்யல் நதிக்கரையில் காந்திஜியின் ஹரிஜன நிதிதிரட்டும் கூட்டத்தில் உரை கேட்ட சிறுமி சுந்தராம்பாள் தான் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டதோடு காந்திஜியின் அறிவுறுத்தலுக்கிணங்க அன்றிலிருந்து கதர் உடையை கட்டத் துணிந்தார் தந்தையாரின் நண்பர் B.S சுந்தரத்தின் விருப்பத்திற்கேற்ப காங்கிரசின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்டார்
1941ம்ஆண்டு சத்தியாக்கிரகப் போரில் கைக்குழந்தையுடன் கைதாகி 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார் 1942ம்ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதாகி 7 மாத சிறைத்தண்டனை 1943ம்ஆண்டு பல்லடம் தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்தபோது தடையை மீறி கூட்டம் நடத்தியமைக்காக 3 மாத சிறைத்தண்டனை என பலமுறை நாட்டிற்காக சிறை சென்றுள்ளார் 
இவர் வழங்கிய 23 ஏக்கர் நிலத்தில் ராஜாஜி கதருக்காக ஜம்னாலால் பஜாஜ் வித்யாலயம் துவக்கப்பட்டது பின்னர் அது காதி கிராமோத்யோக் வித்யாலயாமாகி தற்போது தமிழ்நாடு சர்வோதய சங்கம் நிர்வகித்து வருகிறது வினோபாஜியின் வேண்டுதல்படி அனாதைக் குழந்தைகளுக்கான ஒரு ஆஸ்ரமம் அங்கேரிபாளையத்தில் நிறுவி அதை நடத்திவந்தார்.

Post a Comment

0 Comments