HATE ME

30/recent/ticker-posts

அமைப்பு தேர்தல் முலம் தமிழகத்தில் மறுமலர்ச்சி அடையுமா காங்கிரஸ்

காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் வெளிவந்துள்ளது  உட்கட்சி தேர்தல் அறிவிப்பு

இத்தேர்தல்   மூலம் கட்சியின் கீழ்மட்டம் முதல் அகில இந்திய தலைவர் வரை  வாக்கெடுப்பின்  மூலமே வெற்றியாளர் தலைவராக தேர்தெடுக்கபடுவார்கள்.
நகரம் முதல் தலைவர் வரை தொண்டர்களே ஓட்டுபோட்டு  தேர்ந்தெடுக்க வழிவகை செய்யபட்டுள்ளது

1992 க்கு பின்  ஓட்டெடுப்பின் மூலம் அகில இந்திய தலைவரை தேர்தெடுக்கும் நிகழ்வும்  இது ஆகும்

தமிழகத்தில் 60 வயதுக்கு கீழே இன்று இருக்கும் எவரும், இது போன்ற காங்கிரஸின் அமைப்பு தேர்தலை கண்டிருக்க வாய்ப்பில்லை.

இன்னும் குறிப்பாக சொல்வதாக இருந்தால் - மூதறிஞர் ராஜாஜிக்கும் கர்ம வீரர் காமராஜருக்கும் இடையே, யார் தலைவராவது என்ற போட்டியில், கட்சித் தேர்தல் திருப்பரங்குன்றத்தில் நடந்த போது  காமராஜரை பெரும்பாலான தலைவர்கள் ஆதரித்தனர் - காமராஜர் வென்றார்.

அன்றைய தமிழகமே உற்று நோக்கிய அந்த காங்கிரஸ் அமைப்பு தேர்தல் முடிவு வெளியானவுடன், " குன்றம் உயர்ந்தது - கோடு ( திருங்செங்கோடு) தாழ்ந்தது " என்று அறிஞர் அண்ணா எழுதினார்.

அத்தகைய பரபரப்பான தேர்தலுக்குப் பிறகு, இப்போது தான் தமிழகத்தில் அமைப்புத் தேர்தல் காங்கிரஸில் நடைபெற இருக்கிறது
தொண்டர்கள் இந்நாள் வரை, மாநில கமிட்டி தலைவருக்கான தேர்தலை கண்டிருக்க வாய்ப்பில்லை.

அது போல், மாவட்ட கமிட்டி தலைவருக்கான தேர்தலையும்  பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

அதாவது, மாநில கமிட்டி தலைவராக வர நினைப்பவர்கள் - மாநிலம் முழுதும் பரவலாக வேலை செய்து, தங்களுக்கு வாக்களிக்கக் கூடிய PCC உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறச் செய்தாக வேண்டும்.

இத் தேர்தலில்  யார் வேண்டுமானாலும் பாரபட்சமின்றி   போட்டி போடலாம்


இத்தேர்தலுக்கான குறிப்பு


நவம்பர் 1 முதல் மார்ச் 31 -'2022 வரை   உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்

ஏப்ரல் 1 முதல் 15 வரை நகரங்களுக்கான தேர்தல் நடை பெறும்

ஏப்ரல் 16 முதல் 31 வரை வட்டார தேர்தல் நடை பெறும்

ஜூலை 1 முதல் ஜூலை 21 வரை DCC மாவட்ட தலைவர் தேர்தல் 

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை PCC மாநில தலைவர் தேர்தல் நடைபெறும்

ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை AICC அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெறும்

தொண்டர்களில் யார் வேண்டுமானாலும் திறமை இருப்பின் நகரம் வட்டாரத்தை கைப்பற்றி, தலைவராகலாம் . மாவட்டத்தை கைப்பற்றி, மாவட்ட தலைவராகலாம் . மாநில தலைவரையே நிர்ணயிக்கும் சக்தியாக, நீங்களும் உருவாகலாம் .

நல்லவர்கள் வல்லவர்களை தலைவராக்குங்கள். அருமையான வாய்ப்பை பயன் படுத்தி வெற்றி காணுங்கள் தொண்டர்களே..

இத்தேர்தல் சிறப்பாக நடந்து முடியும் பட்சத்தில்  தமிழகத்திலும் - காங்கிரஸ் மறுமலர்ச்சி அடையும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

Post a Comment

0 Comments