HATE ME

30/recent/ticker-posts

ஆஸ்துமா, இருமல், சளிக்கு லேகியம்

தேவையான  பொருட்கள்

1.மிளகு

2.சுக்கு

3.திப்பிலி

4.தேன்‌

1.மிளகு

உடலுக்கு அதிக சத்துக்களை தரக்கூடியது. மிளகில் கால்சியம்‌, இரும்பு,பாஸ்பரஸ்‌ போன்ற தாது உப்புகளும்‌ கரோட்டின்‌ தயமின்‌ ரியாசின்‌ போன்ற  வைட்டமின்களும்‌ அதிகம்‌ இருப்பதால் செரிமானத்தை சீர்செய்து உடலை வலுப்படுத்தி வாயு தொல்லை.அஷீரணம்‌ ஏற்படாமல்‌ தடுக்கிறது மிளகு நெஞ்சுச்சளியை போக்கும்‌ அருமருந்தாகும்; நுரைஈரல்‌ மற்றும்‌ செரிமான மண்டல உறுப்புகளின்‌ செயல்திறனை அதிகரிக்கும்‌. மிளகுடன்‌ மஞ்சள்‌ சேர்த்து பயன்‌படுத்துவதால்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரித்து புற்றுநோய்‌வராமல்‌ தடுக்கிறது. சரும புற்றுநோய்‌,குடல்‌ புற்றுநோய்‌,வருவதை தடுக்க உதவுகிறது.உடல்‌ எடை குறைக்க பெரிதும் உதவுகிறது ,மிளகின்‌ கருப்பு தோலில்‌ இருக்கும்‌ பட்டோ நியூட்‌ ரியன்ஸ்‌ என்னும்‌ வேதி பொருள்‌ இருப்பதால்‌ ரத்தத்தில்‌ உள்ள கொழுப்பை குறைக்கிறது! இது  அதிக வியர்வை வெளியேற்றும்‌ மற்றும் சிறுநீர்‌ களிக்கும்‌ அளவு அதிகரிக்கும்‌. அதனுடன்‌ நச்சுக்களும்‌ வெளியேறும்‌. பசியின்மையை போக்கும்‌ குணமுடையது மனஅழுத்தம்‌ குறைக்கும் தன்மை உடையது

2. சுக்‌கு

மாசினால்‌ வரும்‌ பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சுக்கு இதனால் மருத்துவமைக்கு செல்ல வேண்டிய அவசியம்‌ இல்லை! காய்‌,கால்‌,மூட்டுவலிகளுக்கு சுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. தொண்டை கர கரப்பாக இருக்கும்போது சுக்கை பொடி செய்து சிறிதளவு பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் சிறிது சுக்குடன்‌ வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டால் வாயு தொல்லை தீரும்‌.

3.திப்பிலி

மூச்சுக்குழாய்‌ அழற்சி,ஆஸ்துமா, இருமல்‌ தொண்டை புண்‌ நுரைஈரல் பிரச்சனை சுவாச பிரச்சனை சரி செய்ய பெரிதும் உதவுறது. பல்வலியை  விரட்டும்‌ வலி நிவாரிணியாகவும்‌ இது உள்ளது. தூக்கத்திற்கு அருமருந்து திப்பிலி. நீரிழிவு நோய்‌ கட்டுக்குள்‌ வைக்க உதவும்‌. கல்லீரல்‌ மற்றும்‌ சிறுநீரக நோய்களுக்கு, சிகிட்சைக்காக பயன்படும்‌. திப்பிலி,பாட்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல்‌ நோய்‌ சிகிச்சைக்கு உதவுகிறது. எடையை குறைக்கும்‌,கொழுப்பின்‌ அளவை குறைக்கும்‌,மலசிக்கல்‌ வாய்‌ தொல்லை,நெஞ்செரிச்சல்‌ போன்ற செரிமான சிக்கல்களை தடுக்கும்‌. வயிற்றுப்புண்‌ ஏற்படாமல்‌ தடுக்கும்‌. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்‌, மேகவேட்கை நோய்‌,கருவுறாமை போன்‌ பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடியது

4. தேன்‌

இது ஒரு மருந்தும்‌, உணவும்‌ கூட! தேன்‌ குடல்‌ புண்‌ நீக்கும்‌ குணம்‌ கொண்டது.சுடுதண்ணீல்‌ கலந்து குடித்து வந்தால்‌ உடல்‌ எடை குறையும்‌.லேசான கீறல்‌ பட்ட இடத்திலும்‌ தேன்‌ போடலாம்‌. புண்‌ ஆற்றக்கூடிய மருந்து. தேனை அனைத்து உணவுகளுடனும்‌ பயன்படுத்தலாம்‌,டீ, உணவு பண்டங்கள்‌ செய்ய தேனை பயன்படுத்தலாம்‌.தேன்‌ எவ்வளவு காலம்‌ வேண்டுமானாலும்‌ கெட்டு போகாமல்‌ இருக்கும்‌ தன்மை கொண்டது.நுரையீரல்‌ சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும்‌ ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும்‌ தேனை பயன்படுத்தலாம்‌.தேன்‌ ஒருபோதும்‌ ஒவ்வாமை ஏற்படுத்தாது.தேன்‌ ஒரு சுவை மிக்க அருமருந்து என கூறலாம்‌.நாம்‌ அன்றாட உணவில்‌ தேனை  சேர்பதினால்‌ உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ வாழலாம்‌

அளவு

மிளகு 50 கிராம்‌

சுக்கு 150 கிராம்‌

திப்பிலி 50 கிராம்‌

தேன்‌ 400 மில்லி

செய்முறை

சுக்கு,மிளகு,திப்பிலி இவை மூன்றையும்‌ பொடி செய்து தேனில்‌ குழைத்து லேகியம்‌ பதத்துடன்‌  நாம்‌ தினமும்‌ காலை மாலை இருவேளை சிறு நெல்லிக்காய்‌ அளவாக சாப்பிட்டு வந்தால்‌ நமது உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரித்துமூட்டுவலி,கைவலி,மற்றும்‌ஆஸ்துமா,காய்ச்சல்‌,சளிதொல்லையிலிருந்து விடுபடலாம்‌.மலசிக்கல்‌,நெஞ்செரிச்சல்‌ வாய்வு தொல்லை நீங்கும்‌ தோல்‌பளபளப்பாகும்‌.குறிப்பாகஆஸ்துமா,அலர்ஜி,போன்றநோய்‌உள்ளவர்கள்‌ மூன்று மாதம்‌ தொடர்ச்சியாக இந்த மருந்தை பயன்படுத்தி வந்தால்‌ நல்ல பலன்‌ கிடைக்கும்‌.


POST CREDIT©

P.SANTHI

ANNAI NAGER

KULASEKHARAM


Post a Comment

0 Comments