மக்களிடம் நடுநிலை என கூறிக்கொள்ளும் Behindwoods நிறுவனம் கடந்த 24 மணி நேரத்தில் அரசியல் தொடர்பான 22 வீடியோக்களை Behindwoods பதிவு செய்திருக்கிறது.
அதில் 15 வீடியோக்கள் பாஜக தலைவர் அண்ணாமலையைப் பற்றியவை. தமிழ்நாட்டின் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட இல்லாத அண்ணாமலைக்காக தனது அரசியல் Schedule-ன் 75 சதவீதத்தை இந்த Behindwoods ஒதுக்கியிருக்கிறது குறிப்பிடதக்கது.
மேலும் 2 பேட்டிகள் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட DMK files குறித்த பால் கனகராஜின் பேட்டி. வானதி சீனிவாசன் அவர்களின் பர்செனல் பேட்டி 2.
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் பேட்டி 2.
தன்னுடைய நடுநிலையை காப்பாற்றி கொள்ள தமிழ்நாடு அரசு நிகழ்ச்சி பற்றியது 1.
(இது தவிர்த்து reels ஆக செந்தில் பாலாஜிக்கு எதிரான சவுக்கு சங்கரின் 4 Reels)
கிட்டத்தட்ட 1 கோடி Followersகளை (9.8 மில்லியன்) வைத்துள்ள ஒரு நிறுவனம் தனது 90 சதவீத நேரத்தை அண்ணாமலை அவர்களை ப்ரோமோட் செய்வதற்காக வேலை செய்கிறது. அதுவும் "ஒரு விரல் புரட்சியே"னு பாட்டெல்லாம் போட்டு, அண்ணாமலையின் Official வார் ரூமாகவே Behindwoods இன்று மாறியிருக்கிறது.
Behindwoods மட்டுமல்ல பல ஊடகங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது
இதேபோல் இயங்கக் கூடிய மற்ற நிறுவனங்களையும் அம்பலப்படுத்துவது முக்கியமானது.
Source @ Vivekanandan Ramadoss
ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்ட போது அது மக்களிடம் சென்று சேராவண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் இதே ஊடகங்கள் அனைத்தும் மேற்கொண்டன என்பது குறிப்பிடதக்கது
0 Comments